"அப்பா... நீங்க தான் ஹீரோ....
யாருடைய Support hm இல்லாம....கஸ்டப்பட்டு போராடி சென்னை வந்தீங்க....
ஒரு வேல சாப்பாட்டுக்கு கூட நீங்க கஸ்டப்பட்டு இருக்கீங்க னு..
நீங்க சொல்லி நான் கேட்டு இருக்கேன்..
இருந்தும் படிச்சு.. நல்ல வேலைக்கு போய்... நம்ம மக்கள் நல்ல
இருக்கணும் னு நெனசீங்க....
கைல காசு இல்லைநாலும்...
தங்கச்சி, தம்பி, அவர்களின் பசங்க னு.. எல்லாரையும் படிக்க வச்சீங்க......
அதை பயன் படுத்தி கொண்டவர்களை மேற்கொண்டு படிக்க வச்சு Doctor, Engineer ஆகவும் ஆக்குனீங்க...
உங்கள சுற்றி இருந்த எல்லாரும் வளர்ந்தாங்க... நீங்க அப்படியே தான் இருந்தீங்க.....
அப்பவும் உங்கள் தேவைக்கு நீங்க சேத்து வைக்கல.......
மூத்தவள் திருமணம்,
மூத்தவன் படிப்புக்கா...
கையில் இருந்த எல்லாம் செலவு செஞ்சீங்க...
எனக்கு தெரிந்தே நான் உங்களை நிறைய முறை மதிக்காமல் நடந்து இருக்கேன்...இருந்தும் எனக்காக என்னுடைய தேவை எல்லாத்தையும் செஞ்சு கொடுக்க....என்னை விட நீங்கள் தான் அதிகம் ஆலஞ்சு இருப்பீங்க.....
Pension 3000 Rs நாலும்.. Weakend Cinema போக 100 Rs தருவீங்க.... நான் வேண்டாம் என்றாலும்.. என் கைக்கு வரும்.
Dindigul ல வீடு விற்கும் போது... யாராச்சும் சொல்லமாட்டங்களா...
"விக்காதீங்க இந்த வீடா... இருக்கட்டும்...தேவைக்கு சமாளிச்சுகலம் னு.."
நீங்கள் எதிர் பார்த்தது எனக்கு நல்லா நியாபகம் இருக்கு அப்பா.
என்னையும்.. மலர் யும், கேட்டீங்க...."வீடு விக்கலாம் னு..."
"நாங்கள் தான் சொன்னோம்.." தாராளமா அப்பா....மூத்தவர்கள் இருக்கிறார்கள்.. எங்களை பார்த்துக்க..."
என்னை Engineering சேர்க்கும் போது... Fees கட்ட... பணம் இல்லாத அப்போ.. சென்னை ல நீங்க அக்கா, அண்ணா, சித்தப்பா னு...
ஒரு ஒரு வீடா ஆளஞ்சது நியாபகம் இருக்கு அப்பா,பணம் கேட்டு....
"எப்படி fees கட்டுரேன் பாரு னு" நீங்க அண்ணா கிட்ட Phone ல சொன்னது....
இன்னும் மறக்கல அப்பா...
நான் வேலைக்கு போனதும்... உங்களையும்,அம்மாவை வசதியா வச்சுக்கணும் னு ஆசை பட்டேன் அப்போ கூட..
"செலவு கம்மி யாக பண்ணு...நம்மகிட்ட இருப்பது போதும்...பணம் சேர்த்து வை...னு..".....
ஒவ்வொரு முறையும் என்னை Railway Station ல Drop பண்ணும் போதும்.
நீங்க சொன்ன Advice a நான் இன்னும் மறக்கல அப்பா.....
இப்பவும் நான் Dindigul போகும் போது...நான் தேடுறேன் அங்க...நீங்க நிற்குரீங்களா னு பார்க்க..............
நீங்க Hospital ல last moment ல இருக்கும் போது கூட....
எனக்கும், மலருக்கும் "வாய்க்கு ருசியா சமைத்து போடலாம்" னு நீங்க "அம்மா கிட்ட கேட்டது நல்லா நியாபகம் இருக்கு அப்பா.."
அதுக்கு அப்புறம் அப்படி எங்களிடம் கேக்க யாரும் வறலையே அப்பா....
நான், அம்மா, மலர்.. சென்னை ல worst situation la இருந்தோம்... என்ன செய்யனே தெரியாமல்.....
சொந்தங்கள் நிறைய பேரு இருந்தும் யாரும் வரலையே அப்பா....ஏன் அப்பா....
உங்க friend அன்று மட்டும் help பண்ணலைனா....நாங்க என்ன பண்ணி இருப்போம் னே தெரியல ப்பா...
நாட்கள் நகர்ந்தது..
இன்று..
நான் நல்ல வேலையில் இருக்கிறேன்..மலரும் தான்...தேவையான எல்லாமே இருக்கு... இப்போ...
நீங்க ஏன் ப்பா விட்டு டு போனீங்க எங்களை...
மலர் கு கல்யாணம் பண்ணி பாக்கணும்...
சொந்தமா வீடு வாங்கணும் னு..
கடைசியா ஆசை பட்டீங்க.....
ரெண்டுமே.. ஏன் முடிவதற்குள் போனீங்க.....
ஒரு வேளை... நானும், மலரும், அம்மாவும் ஏதும் தெரியாமல் உங்கள் அரவணைபிலை லேயே
இருந்து விடக் கூடாது னு நீங்க நெனசீங்கலோ....
இன்று..
நானும் மலரும் Software Engineer's, நல்ல Company la நல்ல வேலை ல இருக்கோம்.
மலர் கு கல்யாணம் ஆகிடுச்சு, எல்லாருக்கும் பிடித்த நல்ல மாப்பிள்ளை, நிறைய அழகான உறவுகள் கேடச் சு இருக்கு.
ஒரு காலத்துல,
நம்மல மதிக் காமல் இருந்த வர்கள் , இப்போ நீங்க "எங்களுக்கு வேணும் னு சொல்லுறாங்க"...
அம்மா எல்லாதையும் ,super ra.. அனைவரும் பாராட்டும் படி முன்னாடி நின்று செய்றாங்க..
இது எல்லாம் இப்போ நடக்குது.
ஆனால்..
அப்பா , அம்மா நிற்க்க வேண்டிய இடத்தில் அம்மா மறைவா நின்னு
வாழ்த்துறாங்களே னு மலர் தேடுறா...
ஒரு ஒரு முறையும் சாமி கும்பிடும் போதும்..அம்மா.. உங்கள நெனச்சு வருத்த படுறாங்க...
இது எல்லாத்துக்கும்... ஏதும் நடக்காதது போல..பேசி...
அவங்களுக்கு ஆறுதல் சொல்லும் படி என்னை ஏன் அப்பா விட்டு டு போனீங்க...
நீங்க கண்ட கனவு எல்லாம் நினைவாகும்
ஆனா..நீங்க இப்போ எங்களுடைய கனவாக மாறி ட்டீங்க அப்பா ...
We Miss You.. Dad....